ETV Bharat / state

சிலம்ப ஆசான்களை பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும் - திருச்சி மாவட்ட அமெச்சூர் சிலம்ப சங்கம் வேண்டுகோள் - TN silambam sangam

TN Amateur Silambam Association: ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற சிலம்ப வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தங்கம் வென்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 5:20 PM IST

தங்கம் வென்ற சிலம்ப வீரர் வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

திருச்சி: ஆசிய அளவிலான சிலம்பம் போட்டி நாகர்கோவில் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை மைதானத்தில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இதில் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த ஆசிய அளவிலான சிலம்பம் போட்டியில் திருச்சி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் அசோசியேஷன் சார்பில், 31 சிலம்ப வீரர் வீராங்கனைகள் மாவட்டச் செயலாளரும், ஆசிய சிலம்ப நடுவர் விஜயகுமார் தலைமையில் பங்கேற்றனர். இதில் திருச்சியைச் சேர்ந்த பத்து வீராங்கனைகளும் 21 வீரர்களும் பங்கேற்றனர். சிலம்பம் போட்டியில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய நான்கு பிரிவுகளில் வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஒற்றை கம்பு வீச்சு, நடு கம்பு வீச்சு, இரட்டைக் கம்பு வீச்சு, ஒற்றை வாள் வீச்சு, இரட்டை வாள் வீச்சு, ஒற்றை சுருள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, குத்துவாரிசை உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற சிலம்ப வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் திருச்சி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் அசோசியேஷன் வீரர் வீராங்கனைகளான மாணவ மாணவிகள் 15 வீரர்கள் தங்கமும், 12 வீரர்கள் வெள்ளியும், 20 வீரர்கள் வெண்கலம் உள்ளிட்ட பரிசுகளை வென்றுள்ளனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை இந்திய அணி வீரர்கள் தட்டிச் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இவ்வாறு போட்டிகளை முடித்துவிட்டு, இன்று திருச்சி ரயில்வே நிலையத்திற்கு வந்த சிலம்ப வீராங்கனைகளுக்கு பெற்றோர், பொதுமக்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், போட்டி குறித்து திருச்சி மாவட்ட அமெச்சூர் சிலம்பம் அசோசியேஷன் மாவட்டச் செயலாளர் விஜயகுமார் கூறுகையில், சிலம்பத்திற்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கிய தமிழக முதல்வருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்தார்.

அரசு சார்பில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் சிலம்ப ஆசான்களை பயிற்சியாளர்களாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். மேலும், இந்த ஆசிய அளவிலான சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள், அடுத்த கட்டமாக உலக அளவில் நடைபெற உள்ள சிலம்ப போட்டியில் பங்கேற்க உள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகுப்பு எப்போது? - உடனடியாக அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.