திருச்சி: கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறைகளின் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.
இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, திருச்சி எம்.பி. திருநாவுக்கரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, "ஆய்வுக் கூட்டத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அத்தியாவசித் தேவைகள் குறித்து கேட்டறிந்ததாகவும், முதலமைச்சரிடம் விவரங்களை கூறி தேவையான நிதியை பெற்றுத் தர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
திருச்சி தொட்டியம் பகுதியில் 49 கோடியே 35 லட்ச ரூபாய் செலவிலும், துறையூர் கோம்பையில் 75 லட்ச ரூபாய் மதீப்பிட்டிலும் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், தமிழகத்தில் 2 கோடி குடும்பம் உள்ள நிலையில், 1 கோடி 75 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் தான் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளதாகவும், 7 லட்சம் மக்களுக்கு மட்டும் தான் 100% வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாட்டிலே மிக மிக குறைவாக வரி வசூல் செய்யும் மாநிலம் என்றால் அது தமிழகம் தான் என்று கூறிய அமைச்சர் மற்ற மாநிலத்தில் அதிகமாக வசூலிக்கப்படுவதாகவும், தமிழகத்தில் 2 ஆயிரம் ரூபாய் வரி என்பது மகாராஷ்டிராவில் 12 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்காலம் முடிந்தவுடன் மாநகராட்சியில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெற்றி மாறனின் "விடுதலை" படப்பிடிப்பில் விபத்து.. சண்டை பயிற்சியாளர் சுரேஷ் பலி!