திருச்சி: திருச்சி மாவட்டத்தை தனது கோட்டை ஆக்கியது திமுக. ஏற்கனவே ஒன்பது சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கையில் வைத்திருந்த திமுக கூட்டணி, திருச்சி மாநகராட்சியில் தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 34 வார்டுகளுக்கு மேல் கைப்பற்றி முத்திரைப் பதித்துள்ளது.
ஐந்து நகராட்சியில் நான்கில் திமுகவும், ஒன்றில் சுயேச்சையை வளைப்பவர் கையிலும் உள்ளது. 14 பேரூராட்சியில் 13 இடங்களை திமுக கைப்பற்றி உள்ளது. ஒரு பேரூராட்சியில் சுயேச்சை மற்றும் திமுகவினர் 6 இடங்களிலும் வெற்றிபெற்றதால் அதிமுக 2, தேமுதிக 1 ஓட்டு வெற்றியை நிர்ணயிக்கிறது.
நகராட்சி வெற்றி நிலவரம்
1. துறையூர் நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 15
அதிமுக - 7
சுயேச்சை - 2
2. துவாக்குடி நகராட்சி 21 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 14
அதிமுக - 1
மதிமுக - 1
அமமுக - 1
விசிக - 1
சுயேச்சைகள் வசம்
3. லால்குடி நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 17
அதிமுக - 4
சுயேச்சைகள் - 2
திமுக கூட்டணி கம்யூனிஸ்ட் - 1
4. முசிறி நகராட்சி 24 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 14
அதிமுக - 4
அமமுக - 2
மதிமுக - 1
தேமுதிக - 1
விசிக - 1
சுயேச்சை - 1
மணப்பாறை நகராட்சி சுயேச்சைகள் கையில்
5. மணப்பாறை நகராட்சி 27 வார்டுகள் வெற்றி நிலவரம்:
அதிமுக - 11
திமுக - 8
சுயேச்சை - 5
காங்கிரஸ் - 1
இந்திய கம்யூனிஸ்ட் - 2
பேரூராட்சி வெற்றி நிலவரம்:
திருச்சியில் 14 பேரூராட்சிகளில் 13 பேருராட்சிகளை திமுக கைப்பற்றியது.
1. மண்ணச்சநல்லூர் பேரூராட்சி 18 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 16
காங்கிரஸ் - 1
மதிமுக - 1
2. கல்லக்குடி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 1
அமமுக - 2
சுயேச்சைகள் - 4
3. பூவாளூர் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 7
அதிமுக - 5
சுயேச்சைகள் - 3
4. புள்ளம்பாடி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 4
சுயேச்சைகள் - 3
5. சமயபுரம் கண்ணணூர் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 10
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1
அதிமுக - 2
சுயேச்சைகள் - 2
6. சிறுகமணி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 2
காங்கிரஸ் - 1
சுயேச்சைகள் - 4
7. பாலகிருஷ்ணன் பட்டி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 10
அதிமுக - 4
ஐஜேகே - 1
8. உப்பிலியாபுரம் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 6
சுயேச்சை - 1
9. பொன்னம்பட்டி பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 4
அதிமுக - 2
சுயேச்சைகள் - 6
மநீம - 1
விசிக - 1
தேமுதிக - 1
10. மேட்டுப்பாளையம் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 13
அதிமுக - 1
சுயேச்சை - 1
11. தாத்தையங்கார் பேட்டை பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 11
அதிமுக - 2
கம்யூனிஸ்ட் - 1
சுயேச்சை - 1
12. காட்டுப்புத்தூர் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 8
அதிமுக - 2
காங்கிரஸ் - 1
விசிக - 1
ஐஜேகே - 1
சுயேச்சை - 1
கொங்கு நாடு - 1
13. கூத்தப்பர் பேரூராட்சி 18 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 14
காங்கிரஸ் - 1
சிபிஐ - 1
சிபிஎம் - 1
மதிமுக - 1
14. தொட்டியம் பேரூராட்சி 15 வார்டுகள் வெற்றி நிலவரம்:
திமுக - 10
அதிமுக - 3
சுயேச்சை - 1
சிபிஐ(எம்) - 1
இதில் 13-வது வார்டு திமுக வேட்பாளர் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்டார்.
இதையும் படிங்க: கொலைசெய்யப்பட்ட திமுக பிரமுகரின் மனைவி வெற்றி