ETV Bharat / state

தமிழக வெள்ள பாதிப்புகளை கடுமையான இயற்கைப் பேரிடராக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் - trichy news

TN CM Speech in Trichy Airport: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த மழைப்பொழிவை கடுமையான இயற்கைப் பேரிடர்கள் என அறிவித்து, தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

TN CM Speech in Trichy Airport
தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:34 PM IST

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற புதிய ஒருங்கிணைந்த முனைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியபோது, "தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதயப்பகுதியாக இருக்கும் திருச்சியில் பன்னாட்டு விமான நிலையத்தில், 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்துள்ளார்.

மேலும், திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீனமயப்படுத்த 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2,302,44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

அதோடு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டப் பணிகளுக்கு பங்குப் பகிர்வு மாதிரி அடிப்படையில், மத்திய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க பிரதமரை கேட்டுக்கொள்கிறேன். அதேபோல, நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் (NHAI) செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீப காலமாக இருவழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய முதலமைச்சர், "கடந்த மாதம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கடுமையான மழைப்பொழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அந்த மாவட்டங்களில் பொது உட்கட்டமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கிறது. மக்களின் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இந்த பாதிப்புகளை 'கடுமையான இயற்கைப் பேரிடர்கள்' என்று அறிவித்து, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க, தமிழ்நாட்டு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோமே என்று எண்ண வேண்டாம், பரந்து விரிந்த இந்தியப்பெரு நாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி, மருத்துவம், அவசியத் தேவைகள், உதவிகள் ஆகியவற்றைச் செய்து தர வேண்டிய முக்கியக் கடமை மாநில அரசுகளுக்குத்தான் இருக்கிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை பிரதமர் நிச்சயமாக நிறைவேற்றித் தருவார் என நான் நம்புகிறேன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ”ஒரு சீனர்களை கூட சட்ட விரோதமாக அனுமதிக்கவில்லை”... பண மோசடி வழக்கில் கார்த்தி சிதம்பரம் பதில்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.