திருச்சி: மணப்பாறை அண்ணாவி நகரைச்சேர்ந்த முருகன் என்பவருடைய மகன்கள் மணிகண்டன் (16), முரளி (12) மற்றும் லிங்கேஸ்வரன் மகன் அஸ்வின் ராஜ் (14) ஆகியோர் பூசாரிப்பட்டியில் உள்ள பாப்பான்குளத்திற்கு குளிப்பதற்காக இன்று சென்றுள்ளனர்.
வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த சிறுவர்களின் குடும்பத்தினர் குளத்திற்குச் சென்று பார்த்தபோது, அங்கு சிறுவர்கள் அணிந்திருந்த துணிகள் மட்டும் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து குளத்திற்குள் இறங்கி தேடிய அவர்கள் சிறுவர்கள் மூன்று பேரையும் சடலமாக மீட்டனர். பின் சிறுவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மூன்று சிறுவர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை!!