திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதில் பயணிகளைப் போல் பயணித்து நடத்துநரிடம் இருந்து 12 ஆயிரத்து 250 ரூபாய் இருந்த பணப்பையை கொடுமுடி பேருந்து நிலையத்தில் பேருந்து நிற்கும்போது லாவமாகப் பறித்துக்கொண்டு தப்பி ஓடிய திருச்சியைச் சேர்ந்த மூன்று திருடர்களை பயணிகளும், பொதுமக்களும் துரத்திப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
காவல்துறையினரின் விசாரணையில் கடந்த 10 ஆண்டுகளாக பிக்பாக்கெட், கோயில் உண்டியலை உடைப்பது, வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும், கடந்த சில நாட்களுக்கு முன் ஈரோட்டில் காவல்துறையினரின் வாகனத்தை திருடியதும், இஸ்லாமியரின் தர்க்கா உண்டியலை உடைத்து திருட முயற்சித்ததும் இந்த மூவர்தான் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து மூவரையும் கைதுசெய்து கொடுமுடி நீதிபதி முன் ஆஜர்படுத்திய பின்னர் காவல்துறையினர் அவர்களை சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:ஒரே இரவில் சேலத்தில் இரண்டு கடைகளில் கொள்ளை: காவல் துறை விசாரணை!