ETV Bharat / state

மோசடி வழக்கில் ஈடுபட்ட வங்கி அலுவலர்கள் 3 பேருக்கு சிறை தண்டனை!

திருச்சி: ரூ.2 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி அலுவலர்கள்3 பேருக்கு சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மோசடி வழக்கில் கைதான வங்கி அதிகாரிகள்
மோசடி வழக்கில் கைதான வங்கி அதிகாரிகள்
author img

By

Published : Mar 13, 2020, 1:43 PM IST

திருச்சி திருவானைக்காவில் பொதுத்துறை வங்கி ஒன்றில் 2003ஆம் ஆண்டு முதல் 2006 வரை இரண்டு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது எனத் தணிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக சிபிஐ 2011 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தது.

இந்நிலையில், தற்போது புதுச்சேரி ரெட்டியார்பாளையம் துறையில் தலைமை மேலாளராகப் பணியாற்றும் ராஜாராம், திருச்சி மண்டல அலுவலகத்தில் மூத்த அலுவலராகப் பணியாற்றும் ராஜசேகரன் ஆகிய இருவரும் சேர்ந்து முருகன் என்கிற பெயரில் வாகன கடன், தனியார் கடன் உள்பட பல்வேறு வகையான போலி ஆவணங்கள் தயாரித்து கடன் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ராஜாராம், ராஜசேகரன், முருகன் ஆகிய மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இதில் மூன்று பேர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் ராஜசேகருக்கு ஐந்தாண்டுகள் சிறை ரூ.2.75 லட்சம் அபராதம், ராஜாராமுக்கு நான்காண்டுகள் சிறை, ரூ. 2.50 லட்சம் அபராதம், முருகனுக்கு ஐந்தாண்டுகள் சிறை, ரூ.7 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி சிவசுப்பிரமணியன் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: கையூட்டு பெரும் போது கையும் களவுமாக சிக்கிய அரசு ஊழியர் - விசாரணையில் லஞ்ச ஒழிப்பு துறை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.