திருச்சி: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொட்டியம் பேரூராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கட்சித் தலைமையால் இடம்ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தொட்டியம் பேரூராட்சிக்குட்பட்ட 6ஆவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த ராஜேஷ் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
பேரூராட்சி துணைத் தலைவர் ராஜினாமா
இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
அதன்படி தொட்டியம் பேரூராட்சி துணைத் தலைவர் ராஜேஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதையும் படிங்க: ஜீவஜோதி கணவர் கொலை வழக்கு: தடா ரஹீம் தவறாகப் பேசியதாகப் புகார்