ETV Bharat / state

‘ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் நிலைப்பாடு உடையவர்’ - திருமா சீண்டல் - Thirumavalavan

திருச்சி: ரஜினிகாந்த் பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் நிலைபாடு உடையவர்- தொல்.திருமாவளவன்
author img

By

Published : Aug 15, 2019, 8:01 PM IST

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மழை வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் வெகுவாக பாதித்துள்ளது. இதற்காக மத்திய அரசு இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்க முன் வரவில்லை என்றும் காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா ஆகியோரின் நடவடிக்கை குறித்து ரஜினிகாந்த் கூறியதற்கு பதில் கூற விரும்பவில்லை. ஆனால் ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜக, ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் தான். அதனால் இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆர்எஸ்எஸ் நிலைபாடு உடையவர்- தொல்.திருமாவளவன்

மேலும் பேசிய அவர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு குரல் தெரிவித்துவிட்டு, தமிழ்நாட்டில் எதிர்ப்பு குரல் தெரிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் செயல் என திருமாவளவன் கூறினார்.

Intro:திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body:திருச்சி:
மழை வெள்ளத்தால் பாதித்த நீலகிரி மாவட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க முன்வரவில்லை என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி இல்ல துக்க நிகழ்வை விசாரிப்பதற்காக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா ஆகியோரின் நடவடிக்கை குறித்து ரஜினிகாந்த் கூறியதற்கு பதில் கூற விரும்பவில்லை. அவர் ஏற்கனவே பாஜக ஆர்எஸ்எஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். அதனால் அவர் கூறியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. அது அவரது விருப்பம். ஆர்எஸ்எஸ் அமைப்பின் 70 ஆண்டுகால கனவு தற்போது காஷ்மீரில் நிறைவேறியுள்ளது. தமிழக நலனுக்கு எதிரான திட்டங்களை எதிர்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
டெல்லியில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மத்திய பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அதிமுக ஆதரவு குரல் தெரிவித்துவிட்டு, தமிழகத்தில் எதிர்ப்பு குரல் தெரிவிக்கிறது. இது மக்களை ஏமாற்றும் செயல்.
காங்கிரஸ்-வைகோ இடையிலான மோதல் முடிந்து போன விஷயம். அது குறித்து எவ்வித கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நல்லிணக்கமாக இயங்கி வருகிறது.
கடைமடை பகுதிகளுக்கு காவிரி நீர் சென்றடையும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். பள்ளிகளில் சாதி அடையாளங்களை வெளிப்படுத்துதல் தொடர்பான அறிக்கை தனக்கு தெரியவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியது ஏற்புடையதல்ல. அமைச்சருக்கு தெரியாமல் அதிகாரிகள் அறிக்கை அனுப்ப முடியாது. மழை வெள்ளத்தால் நீலகிரி மாவட்டம் வெகுவாக பாதித்துள்ளது. இதற்காக மத்திய அரசு இதுவரை எவ்வித நிதியும் ஒதுக்கமுன் வரவில்லை என்றார்.

Conclusion:மழை வெள்ளத்தால் வெகுவாக பாதித்துள்ளது நீலகிரி மாவட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அரசு முன்வரவில்லை என்று திருமாவளவன் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.