ETV Bharat / state

'அதிமுக, பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை': அண்ணாமலை திட்டவட்டம் - அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை

திருச்சி: அதிமுக - பாஜக கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநில துணைத் தலைவர்அண்ணாமலை
பாஜக மாநில துணைத் தலைவர்அண்ணாமலை
author img

By

Published : Oct 12, 2020, 12:10 AM IST

திருச்சி மாவட்டம் வயலூரில் வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க 9ஆவது மாநில செயற்குழு கூட்டம் நேற்று (அக்.11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சங்க நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமை வகித்தார். இதில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, திருச்சி ஒத்தக்கடையில் உள்ள மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய அவர், பாஜக அதிமுக கூட்டணியில் எந்தவொரு குழப்பமும், சலசலப்பும் இல்லை என்றார்.

மேலும், புதிய கூட்டணி தேவை என்பது குறித்த பேச்சுக்கு தற்போதைக்கு இடமில்லை. கூட்டணி குறித்த முடிவை பாஜக தலைமை எடுக்கும் எனத் தெரிவித்த அவர், அதிமுக கூட்டணியில் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்து வருவதாகவும் கூறினார்.

பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் குறித்து கேட்கும் போது, பிற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். நாட்டின் தலைநகர் டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பானதாக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது மத்திய அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.

உத்தரப் பிரதேச சம்பவத்தில் உடனடியாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. எப்பொழுதாவது நடைபெறும் பிரச்னையை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்றார்.

தேர்தல் கூட்டணி குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. கொள்கை ரீதியாகவே அதிமுகவும், பாஜகவும் ஒரே நேர்க்கோட்டில் பயணம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மாற்றத்திற்கு தயாராகி வருகிறது. திராவிட கட்சிகளில் திமுக எல்லா விஷயங்களிலும் மித மிஞ்சி இருக்கிறது. குடும்ப அரசியல் உள்பட இதில் அடங்கும்.

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசிய காணொலி

தனித்துப் போட்டியிடும் அளவிற்கு பாஜகவிற்கு பலம் இல்லாமல் இல்லை. 75 ஆயிரம் பூத்களிலும் பாஜக வேகமாக வளர்ந்துவருகிறது. தனித்துப் போட்டியிடுவதா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடுவதா? என்பது குறித்து பாஜக-வின் தலைமை முடிவு செய்யும் என்றார்.

இதையும் படிங்க:இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பட்டியலினப் பெண் பாலியல் வன்புணர்வு - இருவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.