மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இவை விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்கும் எனக் கூறி எதிர்க்கட்சிகளும், விவசாய சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் 100ஆவது நாளாக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (மார்ச்6) திருச்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தின் எதிரே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் பிரதமர் மோடிக்கு எலும்புக்கூடு பார்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தரையில் படுத்துப் போராட்டம் நடத்தினர். தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் உடன்படாததால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க : கரும்புக்கான நிலுவை தொகையை வழங்க வேண்டும்: விவசாய சங்க தலைவர் சின்னசாமி