ETV Bharat / state

தமிழ்நாட்டு மக்களின் பாசத்தில் நெகிழ்ந்த கோமதி மாரிமுத்து!

திருச்சி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றதற்கு தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு ஊக்கம் அளிப்பார்கள் என தனக்குத் தெரியாது என்று தங்க மங்கை கோமதி மாரிமுத்து நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Gomati Marimuthu
author img

By

Published : Apr 28, 2019, 9:30 AM IST

இது குறித்து நமது ஈடிவி பாரத்துக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், ”நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்த வெற்றியைப் பெற்றேன். இந்திய அரசு எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. முதலிடம் பிடிப்பேன் என்று நான் நினைக்கவில்லை. வெற்றிபெற்றால் தமிழ்நாடு மக்கள் இவ்வளவு ஊக்கம் அளிப்பார்கள் என்றும் எனக்குத் தெரியாது. முன்பே தெரிந்திருந்தால் எப்போதோ சிறப்பாக சாதித்திருப்பேன்" என்றார்.

தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு ஊக்கம் அளிப்பார்கள் என நினைக்கவில்லை- கோமதி மாரிமுத்து

இதைத் தொடர்ந்து கோமதியின் தோழியும், சென்னை மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளருமான பிரான்சிஸ் மேரி கூறியதாவது:

நான் மயிலாப்பூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றிவருகிறேன். கோமதி ஆசிய தடகளப் போட்டியில் வெற்றியடைந்ததை வாட்ஸ்அப் மூலம் தெரிந்து கொண்டேன்.

இருந்தாலும் அதை அவர் கூற கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன். சக போட்டியாளர் கைப்பேசியிலிருந்து வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்திருந்தார். அப்போது நாங்கள் இருவருமே அழுதுவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Francis Marie
பிரான்சிஸ் மேரி

மகள் வெற்றி குறித்து கோமதியின் தாயார் ராசாத்தி, 'என் மகள் வெற்றிபெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் அவள் தனியாக ரொம்ப தூரம் செல்வதை நினைக்கும்போது பயமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும்தான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும். சோற்றுக்கு ரொம்ப கஷ்டமிருந்த போதும் பிள்ளையை படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம்' என தெரிவித்தார்.

திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து. ஆசிய விளையாட்டில் 800 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கம் வென்று இந்திய அளவில் தமிழகத்தும் உலகளவில் இந்தியாவுக்கும் பெருமை தேடி தந்தவர். இவரின் வெற்றிக்கு மயிலாப்பூர் போக்குவரத்து துணை காவல் ஆய்வாளர் பிரான்சிஸ் மேரி உற்ற துணையாக இருந்து செயல்பட்டுள்ளார்.

அதைப்பற்றி அவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

” நான் மயிலாப்பூர் போக்குவரத்து காவலில் சப் இன்ஸ்பெக்டராக பணி புரிகிறேன். கோமதி வெற்றியடைந்ததை வாட்ஸ் ஆப் மூலம் தெரிய வந்தது. இருந்தும் அதை அவர் கூற கேட்க வேண்டுமென்று எதிர்பார்த்து காத்திருந்தேன். அவரிடத்தில் சிறிய வகை போன் தான் உள்ளது. இரவு பணிக்கு கிளம்பும் போது ரிலே தடகள போட்டியில் வெள்ளி வென்ற ஆரோக்கியராஜ் என்பவரது போனிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் வீடியோ கால் செய்திருந்தார். நாங்கள் இருவருமே அழுதுவிட்டோம். வெற்றி பெற்றவுடன் கோமதி எனக்கு முதலில் அழைத்து பேசியது மிகவும் பெருமையாக இருந்தது.

கோமதி என்னுடன் சக வீராங்கனையாக போட்டியிட்டு பின்னர் ஒரு சகோதரி போன்ற உறவாக மாறினார். எனவே அவர் வெற்றி பெற்றதில் மற்ற எல்லாரையும் விட அதிக சந்தோஷத்தை நான் அடைந்தேன். அவர் வெற்றிக்கு நிறைய பேர் காரணமாக இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கு அவர் சார்பாக நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மிக பயங்கரமான கிராமம். தாழ்மை, ஏழ்மை, கீழ்படிதல் என்று ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் கோமதி. பல இடங்களில் அவருக்காக ஷீஸ் ஆர்டர் கொடுத்தோம். அதை பெறுவதில் தொடர்ந்து தடை ஏற்பட்டு வந்தது. இறுதியில் கிழிந்ததை அணிந்தே ஓடினார். ஆனால் அந்த உயிரற்ற ஷீ கூட அவரின் உழைப்பை வீண் போகாமால் அவரை ஜெயிக்க வைத்துள்ளது. 

தடகள போட்டியில் பங்கெடுத்த காரணத்தால் பெங்களூரில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது. அது அவருக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தது. ஆனால் அந்த அரசாங்க வேலை தமிழகத்தில் கிடைத்திருந்தால் அவரால் இன்னும் சிறப்பாக சாதித்திருக்க முடியும். அவருடைய தந்தையையும் அவர் இழந்திருக்க மாட்டார். அவர் மேலும் சிறப்பாக செயல்பட்டு உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெறுவதற்கு அவருக்கு தமிழகத்தில் பணிமாற்றம் செய்துதர வேண்டும்.

வெற்றி பெற்ற பிறகு பரிசுகள் குவிகிறது. ஆனால் இதை வெற்றி பெறுவதற்குமுன் கொடுத்திருந்தால் அவர்களால் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். ஓவ்வொரு வீரர், வீராங்கனைகளையும் ஒருவர் தத்தெடுக்கும் வகையில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து ஊக்கமளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.