திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 15 வயது மகள் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாள்களுக்கு முன் மாயமானார்.பின்னர், இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், பொத்தமேட்டுபட்டியை சேர்ந்த பாலு(எ)பாப்பு மகன் கேசவன்(23) என்பவர், மாணவியை காதல் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து கேசவனை நேற்று இரவு போக்ஸோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் உடந்தையாக இருந்த கேசவனின் தந்தை பாலு(எ)பாப்பு, தாயார் லெட்சுமி ஆகியோரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: