ETV Bharat / state

'இ - சேவை மைய தாமதம் விரைவில் சரியாகும்' - அமைச்சர் உதயகுமார் உறுதி!

திருச்சி: இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்படும் காலதாமதம் விரைவில் சரிசெய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister udhayakumar
author img

By

Published : Aug 21, 2019, 11:54 PM IST

திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) சார்பில் மின்னணு அரசு மற்றும் பொது சேவை விநியோக முறை குறித்த சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

அப்போது அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நவீன காலத்திற்கு ஏற்ப சான்றிதழ்கள், அரசின் பல்வேறு செயல்பாடுகள் இ - சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது முதல் கட்ட முயற்சிதான். இ- சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு தற்போது ஏற்படும் தாமதங்கள் விரைவில் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், " மக்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், அலைச்சலை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்த இ - சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக 85 வட்டங்களும், 11 கோட்டங்களும், 5 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, மற்றும் வேலூர் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கலகலப்பாய் பேசும் அமைச்சர் உதயகுமார்

பூலோக அடிப்படையிலும், மக்கள் தொகை, வருவாய் கிராமங்கள், வட்டங்கள், கோட்டங்கள் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது. புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதல்வர் கொள்கை முடிவை எடுத்து அறிவிப்பார் என்றும் அவர் கூறினார்.

Intro:இ-சேவை மையங்களில் ஏற்படும் தாமதங்கள் விரைவில் சரியாகும் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.

Body:திருச்சி: இ-சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு ஏற்படும் காலதாமதம் விரைவில் சரியாகும் என்று வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறினார். திருச்சியில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) சார்பில் மின்னணு அரசு மற்றும் பொது சேவை வினியோக முறையில் உள்ள சவால்கள், வாய்ப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்த சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கம் இன்று நடந்தது. இந்த கருத்தரங்கை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் வளர்மதி, தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சக முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு அரசு இ-கவர்னன்ஸ் முகமை சிஇஒ சந்தோஷ் மிஸ்ரா, திருச்சி ஐஐஎம் இயக்குனர் பீமராயா மேத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், நவீன காலத்திற்கு ஏற்ப சான்றிதழ்கள், அரசின் பல்வேறு செயல்பாடுகள் இ-சேவை மையங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இது ஆரம்ப கட்ட முயற்சி ஆகும். இதில் ஏற்படும் தாமதங்கள், சவால்கள் போன்றவற்றை சரி செய்வதற்காக இதுபோன்று கருத்தரங்கங்கள் நடத்தப்படுகிறது. இந்த கருத்தரங்கங்களில் இருந்து பெறப்படும் பரிந்துரைகளின் அடிப்படையில் இ-சேவை மையங்களில் ஏற்படும் தாமதங்கள், சவால்கள் சரிசெய்யப்படும். அதனால் இ- சேவை மையங்களில் சான்றிதழ் பெறுவதற்கு தற்போது ஏற்படும் தாமதங்கள் விரைவில் சரியாகும். முந்தய காலங்களில் ஒரு சான்றிதழ் பெற வேண்டும் என்றால் மூன்று மாதங்கள் ஆகும். மக்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்தவும், அலைச்சலை மிச்சப்படுத்தும் வகையிலும் இந்த இ-சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது. இது முதல் கட்ட முயற்சி தான். அதனால் இதில் உள்ள பிரச்சனைகள் விரைவில் தீரும். தமிழகத்தில் புதிதாக 85 வட்டங்களும், 11 கோட்டங்களும், 5 மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, மற்றும் வேலூர் மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பூலோக அடிப்படையிலும், மக்கள் தொகை, வருவாய் கிராமங்கள், வட்டம், கோட்டங்கள் அடிப்படையில் மாவட்டங்கள் பிரிக்கப்படுகிறது. தேவைப்படும் போது எப்படி வட்டங்கள், கோட்டங்கள் பிரிக்கப்பட்டதோ, அதேபோலதான் மாவட்டங்களும் பிரிக்கப்படுகிறது. மேலும் மக்களிடம் இருந்து வரப்பெறும் கோரிக்கைகளின் அடிப்படையில் மூன்றும உயர் அலுவலர்களை கொண்ட குழு ஆய்வு செய்து, புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பாக முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வர் கொள்கை முடிவெடுத்து இதை அறிவிப்பார். வருவாய் துறை அமைச்சர் என்பதற்காக இதுபோன்ற புதிய மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பான அறிவிப்புகளை நான் வெளியிட முடியாது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்துவது தொடர்பாக எனக்கு எவ்வித தகவலும் தெரியாது என்றார்.

Conclusion:புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதல்வர் கொள்கை முடிவை எடுத்து அறிவிப்பார் என்று அமைச்சர் உதயகுமார் கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.