ETV Bharat / state

திருச்சியின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் தொடங்கியது

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்ட முதல் ஜல்லிக்கட்டு போட்டியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Jan 16, 2023, 10:55 AM IST

Updated : Jan 16, 2023, 11:05 AM IST

திருச்சி மாவட்டம் பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று (ஜனவரி 16) ஜல்லிக்கட்டு தொடங்கியது. போட்டியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டி 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் தை 2ஆம் தேதி கோயில் திருவிழாவை முன்னிட்டு சூரியூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு விழாவையும் கோயில் நிர்வாகம் ஏற்றி நடத்திவருகிறது. இதற்காக 400 மீட்டர் தூரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு களத்திற்குள் 15 மீட்டர் வரை தேங்காய் நார்கள் கொட்டப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர், ஜல்லிக்கட்டு காண வருவதால் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருச்சியின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி பெரிய சூரியூரில் தொடங்கியது

இந்த போட்டியை காண அதிக பார்வையாளர்கள் குவிந்துவருவதால் கிராம் கோலாகலமாக காட்சியளிக்கிறது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்க மோதிரம், இருசக்கர வாகனம், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்க விழா குழு ஏற்பாடு செய்துள்ளது.

இதையும் படிங்க: விமானத்தில் கடத்தவிருந்த ரூ‌.25 லட்சம் வெளிநாட்டுப் பணம் பறிமுதல்!

Last Updated : Jan 16, 2023, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.