திருச்சி: மணப்பாறையில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் நேற்று முழுதும் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்தை பகுதி அருகே உள்ள நியாய விலைக்கடை, கரிக்கான் குளம், அப்பு அய்யர் குளம், உழவர் சந்தை, அரசினர் மாணவர்கள் மற்றும் மாணவிகள் விடுதி உள்ளிட்டப் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்கள் விடுதியில் எழுதப்பட்டிருந்த "பிறப்பு தரித்திரமாக இருந்தாலும் இறப்பு சரித்திரமாக இருக்கட்டும்" என்ற வாசகத்தைக் கண்ட ஆட்சியர் அதை உடனடியாக அகற்றும்படி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து பண்ணபட்டி ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பனை விதைகள் நடும் நிகழ்ச்சிக்குச் சென்று, அங்கு பனை விதைகளை நடவு செய்தார். இதில் வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர், நகராட்சி ஆணையர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்!