ETV Bharat / state

அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடு சிறப்பு தபால் தலை உறை வெளியீடு - அரும்பாவூர் மரச்சிற்பத்திற்கு புவிசார் குறியீடு

இந்திய அஞ்சல்துறை சார்பில் திருச்சியில் நடைபெற்று வரும் மெய்நிகர் தபால் தலை கண்காட்சியில்  புவிசார் குறியீடு பெற்ற அரும்பாவூர் மரச்சிற்பம், தஞ்சை நெட்டி வேலைப்பாடு குறித்த சிறப்பு தபால் தலை உறை வெளியிடப்பட்டது.

அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடு சிறப்பு அஞ்சல் தலை உறை வெளியீடு

author img

By

Published : Mar 9, 2022, 7:14 PM IST

திருச்சி: நாட்டின் 75ஆவது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மத்திய அரசின் 'ஆஸாதிகா அம்ரித் மஹோத்சவ்' கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இந்திய அஞ்சல்துறையின் திருச்சி கோட்டம் சார்பில் 'டெல்டா டிஜிபெக்ஸ்' (DELTA DIGiPEX 2022) என்ற பெயரில் மெய்நிகர் தபால்தலை கண்காட்சி மற்றும் போட்டிகள் திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (மார்ச் 9) தொடங்கியது.

அஞ்சல் தலை சேகரிப்பினை ஊக்குவிக்கவும், நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தபால் தலை சேகரிப்பின் மூலம் இளைஞர்கள், மாணவர்கள் அறிந்து கொள்ளவும் 9ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த தபால் தலை கண்காட்சி, கரோனா பெருந்தொற்று காரணமாக முதல்முறையாக இணையவழியில் டிஜிட்டல் முறையில் நடத்தப்படுகிறது.

அரசுகள் உதவ வேண்டும்

இதில், குறிப்பாக இந்தியாவின் புவிசார் குறியீடு பெற்ற சிறப்புவாய்ந்த அரும்பாவூர் மரச்சிற்பங்களையும், கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும், அதேபோல தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைக்கு அடுத்தபடியாக புவிசார் குறியீடு பெற்ற தஞ்சை நெட்டி கலைகளுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் சிறப்பு தபால் தலை உறைகளை மத்தியமண்டல அஞ்சல்துறை தலைவர் கோவிந்தராஜன் வெளியிட ரயில்வே கோட்டமேலாளர் ராமலிங்கம், சிறப்பு விருந்தினர்கள் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

அரும்பாவூர் மரச்சிற்ப வேலைப்பாடு சிறப்பு தபால் தலை உறை வெளியீடு

இதுகுறித்து, அரும்பாவூர் மரச்சிற்ப கலைஞர் மதிவாணன் கூறுகையில், "பல ஆண்டுகளாக அரும்பாவூர் மரச்சிற்பதொழிலில் ஈடுபட்டவந்த தங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததுடன், தற்போது சிறப்பு தபால் தலை உறை வெளியிடப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. கரோனா காலத்தில் இரண்டு ஆண்டுகளாக வேலையின்றி கஷ்டப்பட்டு வந்த தங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மரச்சிற்ப தொழில் தலைத்தோங்க வழிவகை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டார்.

இதையும் படிங்க: ஜாமீனில் வெளியாகிறார் பேரறிவாளன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.