திருச்சி: முருகப் பெருமானுக்குப் பிடித்தமான ஆலயங்கள் இரண்டு என்பார் அருணகிரிநாதர். ஒன்று திருச்செங்கோடு, மற்றொன்று திருச்சி வயலூர்.
திருச்சியில் இருந்து மேற்கே 18 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது வயலூர். குமாரவயலூர் என்னும் வயலூர், வயல்கள் சூழ்ந்த இடம் என்பதால் இந்தப் பெயர் பெற்றது என்பர்.
இவ்வூரை 'உறையூர் கூற்றத்து வயலூர்', 'தென்கரை பிரமதேய நந்திவர்ம மங்கலம்' 'ராஜகம்பீர வளநாடு' 'மேலைவயலூர்' என்று குறிப்பிடுகின்றன. அருணகிரிநாதர் இங்குள்ள முருகப்பெருமானை வழிபட்டு 18 பாடல்கள் புனைந்த பெருமை கொண்ட தலம் இது.
இங்கிருந்தே திருப்புகழ் என்னும் பெரும் பொக்கிஷம் உருவானது என்பதும் இவ்வாலய பெருமைகளில் ஒன்று. ஒவ்வொரு தைப்பூசத்தன்றும் களைகட்டும் கட்டுக்கடங்காத பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து முருகனை வழிபாடு செய்வது வழக்கம். கரோனா தொற்றால் இந்தாண்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு தடைவிதித்துள்ளதால் கோயில் வாசலிலேயே பகதர்கள் தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி விட்டு சென்றனர்.
கோயிலுக்கு வெளியே எண்ணிலடங்கா பக்தர்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
இதையும் படிங்க: கரோனா பரவலுக்கிடையே ஆசிரியர்களுக்கு நேரடியாக புத்தாக்கப் பயிற்சியா?