திருச்சி: தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று (டிசம்பர் 13) தனி விமானம் மூலம் ஹைதராபாத்திலிருந்து திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து தனியார் ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வு எடுத்த அவர், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வந்தார்.
அங்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, கோயில் அர்ச்சகர்கள், நிர்வாகிகள் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளுக்கு பழம் கொடுத்து சந்திரசேகர் ராவ் ஆசிர்வாதம் வாங்கினார். மூலவர் ரங்கநாத பெருமாள், உற்சவர் நம்பெருமாள், தாயார் சன்னதியில் அவர் தனது குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க: PM Modi in Varanasi: கங்கையில் நரேந்திர மோடி புனித நீராடல்!