திருச்சி: புதிய வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் டிசம்பர் 23ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம்- கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம்- கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில், அக்குழுவின் தலைவர் தனபால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு, இந்திய விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் தளபதி உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டள்ளது.
இதையும் படிங்க: டெல்லியில் தற்கொலை போராட்டம்! - அய்யாக்கண்ணு அறிவிப்பு!