ETV Bharat / state

கோவை கார் வெடி விபத்து - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், இஸ்லாமியர்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் போராட்டம் நடத்த உள்ளதாகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 6, 2022, 6:57 PM IST

திருச்சி மாவட்டம் எஸ்எஸ்மஹாலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயற்குழு கூட்டம் இன்று (நவ.6) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் சுலைமான் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல் கரீம், மாநில பொருளாளர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில், கோவை கார் சிலிண்டர் வெடி விபத்து சம்பவத்தை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயம் கண்டித்தது. இந்த வன்முறைக்கு எதிராக அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பிய நேரத்தில் பாசிச சிந்தனை கொண்டவர்கள், இதன் மூலம் மதவாத அரசியல் செய்ய திட்டமிட்டு காவல் துறைக்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தினர். பதட்டத்தை ஏற்படுத்த பந்த் அறிவித்தனர். தமிழ்நாட்டில் பாசிச சக்திகளின், சதி வேலைகள் எடுபடாது என்பதையும் அதை முறியடிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்ளும்.

ஆளும் ஒன்றிய அரசு, சிறுபான்மை சமுதாய மக்களை ஒடுக்குவதற்கு பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்கிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இஸ்லாமியர்கள் உரிமையை பறிக்கும் வகையில் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்தால் ஜனநாயக வழியில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்படும்.

அதேபோல், இந்திய நாட்டில் சிறுபான்மை சமூகம், பாசிச சக்திகளால் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகிறது. அதன்படி, ஹிஜாப் அணிய தடை ஹலால் இறைச்சி தடை, ஒலிபெருக்கியில் பாங்கு சொல்ல தடை, போராட்டம் நடத்தினால் புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது, முத்தலாக் தடைச் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து 370 நீக்கியது, என்ஐஏ-விற்கு சிறப்பு அதிகாரங்கள், பொது சிவில் சட்டம் என்று இஸ்லாமியர்களை ஒடுக்கும் அனைத்து விஷயங்களையும் பாஜக அரசு செய்து வருகிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். வருகிற பிப்.5 ஆம் தேதி 'பித்அத் ஒழிப்பு மாநாடு' நடைபெற உள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சி அமைப்புகள் என ஒவ்வொன்றிலும் இஸ்லாமியர்கள் பெற்றுள்ள இடம் என்ன? என்பதை அறியும் வகையில் தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இந்திய நாட்டை உருவாக்குவதற்கும் இந்திய நாடு சுதந்திர பெருவதற்கு இஸ்லாமியர்கள் ஆற்றிய பங்கு மகத்தானது; அத்தகைய இஸ்லாமியர்களை நாட்டை விட்டு அன்னியப்படுத்தும் தீய நோக்கில் ஒன்றிய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கு: காவல் உதவி ஆணையர் உட்பட 10 பேர் மீது வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.