ETV Bharat / state

'டிடிவி தினகரன் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாடு முன்னேறும்'- முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் முஸ்தபா - தமிழ்நாடு முஸ்லீம் கட்சி

திருச்சி: டிடிவி தினகரன் முதலமைச்சராக வந்தால் மட்டுமே தமிழ்நாடு முன்னேறும் என தமிழ்நாடு முஸ்லீம் கட்சியின் தலைவர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

trichy ammk meeting  tamil nadu muslim league party leader  tamil nadu muslim league party leader controversy speech  தமிழ்நாடு முஸ்லீம் கட்சி  முஸ்தபா
தமிழ்நாடு முஸ்லீம் கட்சித் தலைவர்
author img

By

Published : Jan 24, 2020, 5:02 PM IST

அமமுகவின் அகில உலக செயல்வீரர்கள் அறிமுகக்கூட்டம் இன்று திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் கொள்கைபரப்புச் செயலாளர் செய்யார் சரஸ்வதி, அமைப்புச் செயலாளர்கள் மனோகர், சாருபாலா தொண்டைமான், மாவட்டச் செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் துபாயில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடப்பட்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் முஸ்தபா, ”தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் ஈபிஎஸ், துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ் ஆகியோர் ஒரு பிரயோஜனமும் இல்லாதவர்கள்.

தமிழ்நாடு முஸ்லீம் கட்சித் தலைவர்

தமிழ்நாடு முதலமைச்சராக டிடிவி தினகரன் வந்தால் மட்டுமே தமிழ்நாடு முன்னேறும். மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா எப்படி தடுத்து நிறுத்தினாரோ, அதேபோல டிடிவி தினகரன் அத்தகையத் திட்டங்களைத் தடுத்து நிறுத்துவார். சிறுபான்மையினரை திமுக ஏமாற்றுகிறது" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முதலமைச்சருடன் பினராயி விஜயன் விரைவில் சந்திப்பு

Intro:முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் எதற்கும் பிரயோஜனம் இல்லாத சனியன்கள்" என்று அமமுக கூட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Body:
திருச்சி:

"முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் எதற்கும் பிரயோஜனம் இல்லாத சனியன்கள்" என்று அமமுக கூட்டத்தில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக அகில உலக செயல்வீரர்கள் அறிமுக கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் செய்யார் சரஸ்வதி, அமைப்புச் செயலாளர்கள் மனோகர், சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் துபாயில் உள்ள கட்சியின் நிர்வாகிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடபட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக முஸ்லிம் லீக் கட்சியின் மாநில தலைவர் முஸ்தபா கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கும் ஈபிஎஸ், துணை முதலமைச்சராக இருக்கும் ஓபிஎஸ் ஆகியோர் ஒரு பிரயோஜனமும் இல்லாத சனியன்கள். தமிழக முதலமைச்சராக டிடிவி தினகரன் வந்தால் மட்டுமே தமிழகம் மேல்நோக்கி செல்லும். மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களை ஜெயலலிதா எப்படி தடுத்து நிறுத்தினாரோ,. அதேபோல் டிடிவி தினகரன் அத்தகைய திட்டங்களை தடுத்து நிறுத்துவார். சிறுபான்மையினரை திமுக ஏமாற்றுகிறது என்றார். முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் சனியன்கள் என்று முஸ்தபா குறிப்பிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.