ETV Bharat / state

புதிய கல்வி கொள்கையை பின்பற்றவில்லை.. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் - வடகிழக்கு பருவமழை

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய இணை அமைச்சர் தவறான தகவலை பரப்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை

author img

By

Published : Nov 5, 2022, 4:22 PM IST

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்து வருகிறது.

திருச்சி எஸ்.ஐ. டி தொழில்நுட்ப பயிலகத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆகியோர் துவக்கி வைத்து பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், மத்திய கல்வி இணை அமைச்சர் பொய்யான தகவல்களை தமிழகத்துக்கு வந்து பரப்பி சென்றுள்ளார்.

புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு பின்பற்றவில்லை

திருச்சியில் வந்து புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவதாக தவறான தகவல் தெரிவித்துள்ளார். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கை பின்பற்றவில்லை. யாரோ தவறான தகவலை அவருக்கு கொடுத்துள்ளனர்.
மத்திய கல்வி இணையமைச்சர் சரியாக படித்து பார்க்கவில்லை என எண்ணுகிறேன். அவர் சரியாக படித்து பார்த்தால் தெரியும் அவர் கூறுவது போல் எதுவும் இல்லை என அமைச்சர் மகேஷ் குறிப்பிட்டார்.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், இடியும் நிலையில் உள்ள பள்ளி மதில் சுவர்கள் கட்டடங்களில் மாணவர்களை அமர வைத்து கல்வி கற்பிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம்.

போட்டித்தேர்விற்கு பயிற்சி அளிக்கப்படும் என்று ஏற்கனவே நாங்கள் கூறியிருந்தோம். கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய மாணவர்கள் அரசு துறைகளில் பணியாற்றுவது போன்று பல போட்டி தேர்வுகளுக்கு அவர்களை தயார் படுத்துவது கட்டாயம் என்பதால் பயிற்சி தருகிறோம்.

ஏழை மாணவர்கள் பலன் அடைய வேண்டும் என்கிற நோக்கில் தான் அரசு சார்பில் இந்த ஏற்பாடு என தெரிவித்தார். நீட் தேர்வை பொறுத்தவரை ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் ஒன்று சேர்ந்துதான் சட்ட மசோதவை அனுப்பி வைத்தோம் என கூறினார்.

இதையும் படிங்க: கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி குழந்தையுடன் பெண் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.