ETV Bharat / state

காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் - அண்ணாமலை - Annamalai

காவி நிறம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானதல்ல, அதனை பாஜக சொந்தம் கொண்டாடவும் இல்லை, காவி நிறம் பொதுவானது காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Etv Bharatலாலுபிரசாத்  ஊழல்வாதிதான் - பாஜக தலைவர் அண்ணாமலை

author img

By

Published : Dec 11, 2022, 10:28 AM IST

Updated : Dec 11, 2022, 11:05 AM IST

காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள் - அண்ணாமலை

திருச்சி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இளைஞர் அணியின் மாநில செயலாளர் தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட கட்சி முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, "தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளில் எம்பி, சட்டமன்ற உறுப்பினர் என அனைத்து பதவியிலும் பாரதிய ஜனதா கட்சியினர் இருப்பார்கள். அதை நோக்கி இளைஞர் அணியினர் கட்சிக்கு பணியாற்ற வேண்டும். மக்களுக்காக மண்ணுக்காகவும் வாழ வேண்டும். அரசியல் வாழ்க்கையில் வெற்றி பெற்று வாழ்க்கையில் பூஜ்ஜியமாகிவிடக் கூடாது. பிரதமர் மோடி சலனப்படாதவர். நாம் அனைவரும் சலனப்படக்கூடியவர்கள் என்றும் காங்கிரஸ் கட்சியில் அனைவரும் தலைவர்கள். பாஜகவில் அப்படி இல்லை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பொறுப்பு உள்ளது" என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசியதாவது: "லாலு பிரசாத் ஊழல்வாதி தான். ஆனாலும் அவர் திறமை வாய்ந்த அரசியல் தலைவர். அவரது மனைவி முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர் என குடும்பத்தினரே பதவிகளை ஆக்கிரமித்தனர். ஒருவருடைய அரசியல் வாழ்க்கை மண், மக்கள் நலம் சார்ந்து இருக்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் அரசியல் வாழ்க்கை பூஜ்ஜியம் ஆகிவிடும். இதற்கு லாலு பிரசாத் உதாரணமாகிவிட்டார். தமிழ்நாட்டிற்கும் இது பொருந்தும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "காவி நிறம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமானதல்ல. அதனை பாஜக சொந்தம் கொண்டாடவில்லை. பாஜக நிறம் காவிதான் என விசிக தான் கூறி வருகிறது. காவி நிறம் பொதுவானது காவியை நேசிப்பவர்கள் தேசத்தை நேசிப்பவர்கள். ஆன்லைன் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும் என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. அமைச்சர் பதவியை யாருக்கு வேண்டுமானாலும் வழங்க முதலமைச்சருக்கு அதிகாரம் உண்டு. திமுகவில் ஏற்கனவே குடும்ப ஆட்சி தான் எனக் கூறி வருகிறோம். கனிமொழிக்குத் துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உதயநிதிக்கும் பதவி வழங்கப்பட உள்ளது. இது குடும்ப ஆட்சி தான் என்பதை உணர்த்துகிறது என்றார்.

புயல் நேரங்களில் கண்டிப்பாக விமர்சிக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து இது போன்று அதிக புயல்கள் வருகிறது. பேரிடர் மேலாண்மைக்கு அரசு தனி அங்கீகாரம் கொடுக்க வேண்டும். இறையன்பு ஐஏஎஸ் அதிகாரியின் சகோதரர் குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்ட போது தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார் - அது போல் நியமித்து பேரிடர் மேலாண்மைத் துறைக்குத் தனிக் கவனம் செலுத்த வேண்டும். திருச்சியில் திமுக பிரமுகர் ஒருவர் பப் துவங்கி அதில் பெண்களுக்கு மது இலவசம் என்கிறாராம். இதைப் பற்றி நான் பேசுவதற்கே வெட்கப்படுகிறேன். அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் கோடியாக மது விற்பனை இருக்கும் அப்போது என்ன செய்யப் போகிறோம். மது விலக்கு பாஜகவிற்குப் பிரச்சினையே இல்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க:மோடி அணிந்த 'காரகுலி' தொப்பி பற்றி தெரியுமா..?

Last Updated : Dec 11, 2022, 11:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.