ETV Bharat / state

நெருங்கும் தேர்தல்: அதிமுகவுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் ஆதரவு - சித்த மருத்துவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

திருச்சி: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

அதிமுகவுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் ஆதரவு

author img

By

Published : Dec 30, 2020, 5:26 PM IST

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம், அனைத்திந்திய மாற்றுமுறை மருத்துவ அகாடமி, தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் ஆகியவற்றின் சிறப்பு ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கூட்டரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜான் ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மூன்று லட்சம் சித்தா, ஆயுர்வேதா, யோகா, அக்குபஞ்சர், இயற்கை மூலிகை மருத்துவர்கள் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்கள் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ள 2ஆயிரம் மினி கிளினிக் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

யோகா, இயற்கை முறை, அக்குபஞ்சர், மருத்துவத்திற்கு தனி கவுன்சில் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்துவரும் மாநில அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் சித்தா, ஆயுர்வேதம், யோகா, அக்குபஞ்சர், ஹோமியோ மாநாட்டில் மருத்துவர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: பொங்கல் பரிசுத் தொகை டோக்கனில் அதிமுக சின்னம் : திமுக மனு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.