மணப்பாறை அருகே ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சுஜித்தை மீட்கும் பணி 51 மணி நேரத்திற்கும் மேலாகத் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. பழைய ரிக் இயந்திரத்தில் 35 அடிக்கு மேல் துளையிடப்பட்டது. புதிய ரிக் இயந்திரத்தை ஒன்றிணைக்கும் பணிகள் ஒருபுறம் நடந்துவருகிறது.
யாரும் எதிர்பாராத வகையில் பழைய ரிக் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதைத் தொடர்ந்து, மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ரிக் இயந்திரத்தின் மூலம் துளையிடப்படும் பணிகள் தொடங்க இன்னும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்பதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்த ஆலோசனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கரும் ஆர். பி. உதயகுமாரும் ஈடுபட்டுள்ளனர்.