ETV Bharat / state

திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை- முக ஸ்டாலின் - குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத்தொகை

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

Stalin said that DMK government will provide assistance to home makers

author img

By

Published : Mar 8, 2021, 9:13 AM IST

திருச்சி: தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 'தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம்' என்ற பொதுக்கூட்டம் திமுக சார்பில் திருச்சி மாவட்டம் சிறுகனூரில் நடைபெற்றது. இந்தக் பொதுக்கூட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் கொடியேற்றி தொடங்கிவைத்தார்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், "திமுக தொடங்கியவுடன் தேர்தலில் போட்டியிடலாமா? என்ற முடிவு திருச்சியில் தான் எடுக்கப்பட்டது. முன்பு இந்த பொதுக்கூட்டமானது மாநாடாகவே நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர், தேர்தலைக் கருத்தில்கொண்டு பொதுக்கூட்டமாக மாற்றி அறிவிக்கப்பட்டது. ஆனால் திமுக முதன்மைச் செயலாளர் நேரு மற்றும் மாவட்ட செயலாளர்கள், ஐந்து மாநாடுகள் ஒரே இடத்தில் நடப்பது போல் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் இந்தத் திருச்சி பொதுக்கூட்டம் அமைந்துள்ளது.

திமுக ஆட்சியில் இருந்தபோது அமைத்த அனைத்து கட்டமைப்புகளையும் அதிமுக ஆட்சியினர் அழித்துவிட்டனர். ஆட்சியில் இருந்தபோது சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் பதவியிழந்த முதலமைச்சர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றார். சூழ்நிலை காரணமாக சசிகலா சிறைக்கு சென்றார். இந்தச் சமயத்தில் காலில் விழுந்து, ஊர்ந்து சென்று எடப்பாடி பழனிசாமி பதவியைப் பெற்றார். பின்னர் பாஜகவிற்கு அடிமையாகி, அதிமுகவுக்கு எதிராக வாக்களித்த ஓ பன்னீர்செல்வத்துடன் இணைந்து ஆட்சி அமைத்தார். பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவியும் கொடுத்து விட்டார். இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டை நாசமாக்கிவிட்டனர்.

இந்த ஆட்சிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மே 2ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு புதிய விடியலாக திமுக ஆட்சி அமைய உள்ளது. சமூகநீதி, மாநில சுயாட்சி, நவீன மேம்பாடு, கல்வி வளர்ச்சி, சமத்துவ ஆட்சியாக அமையும். எனது கனவு திட்டத்தை தற்போது திருச்சியில் அறிவிக்கிறேன். தொலைநோக்கு திட்டமாக 7 திட்டங்கள் இங்கே அறிவிக்கப்படுகிறன. இதற்கு ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள் என பெயரிடப்பட்டுள்ளது.

முதலில் 7 துறைகள் சீரமைக்கப்பட உள்ளன. 10 ஆண்டுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்படும். அதற்கு முதலாவதாக பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, சமூக நீதி ஆகிய ஏழு துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

புதிதாக 10 லட்சம் வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் உருவாக்கப்படும். தற்போதுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் பாதியாக குறைக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடி மக்கள் 10 ஆண்டுகளில் மீட்கப்படுவார்கள். இதன் மூலம் தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் ஒருவர் கூட இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் வேளாண் சாகுபடி அளவு 75 சதவீதமாக உயர்த்தப்படும். குறையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். உள்நாட்டு உற்பத்தியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப் படுவதை விட மூன்று மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். முன்மாதிரியாக மருத்துவமனைகள் அமைக்கப்படும்.

கைக்கெட்டும் தொலைவிலேயே தலைசிறந்த கல்வி மற்றும் சுகாதார வசதிகள் மக்களுக்கு கிடைக்கும். கிராமங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். சமூகநீதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்உள்ள அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயனடைவார்கள். விரைவில் அமைய உள்ள திமுக ஆட்சி ஒரு கட்சியின் ஆட்சியாக இல்லாமல் ஒரு இனத்தின் ஆட்சியாக அமையும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து தொலைநோக்கு திட்டங்களும் திமுக ஆட்சியில் முழுமையாக நிறைவேற்றப்படும். தமிழ்நாடு எழுச்சி பெற வேண்டும். இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. மக்களின் ஆதரவுடன் திமுக அரசு அமையும். இது அனைவரது அரசாங்கமாக இருக்கும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை திமுகவினர் மக்களிடம் கொண்டு சேர்த்தால் திமுகவின் வெற்றியை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது.

திமுகவின் ஆட்சி என்பது ஐந்து ஆண்டுகளுடன் முடியாமல், அவை தொடர்ந்தால் தான் இந்தத் திட்டங்களை நிறைவேற்ற முடியும். என்நாளும் திமுக ஆட்சிதான் என்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். அதிமுக ஆட்சியின் கவுண்டவுன் தற்போது தொடங்கி உள்ளது" என்றார்.

இந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என். நேரு உள்ளிட்டோர் பேசினர். இளைஞரணி செயலாளர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக மாநில மாவட்ட நிர்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.