திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சுஜித்தின் உடலை ஆவாரம்பட்டி பாத்திமாபுதூர் கல்லறையில் அடக்கம் செய்துள்ளனர்.
சுஜித்தை அடக்கம் செய்த இடத்திற்குச் சென்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து சுஜித்தின் வீட்டிற்குச் சென்ற ஸ்டாலின், பெற்றோர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை 80 மணி நேரமாகப் போராடியும் உயிருடன் மீட்கப்படாதது வேதனை அளிப்பதாக தெரிவித்த அவர், குழந்தையின் குடும்பத்திற்கு ரூபாய் பத்து லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
இதையும் படிங்க : 'சுஜித் இறப்பு ஒரு பாடம்' - நடிகர் விமல் வேதனை