108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்ற வைணவத் திருத்தலமாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். இதில் வைகுண்ட ஏகாதசி திருவிழா என்பது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். அந்த வகையில் இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக் கால் நடப்பட்டது.
கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அறங்காவலர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவிழா குறித்த விவரம் பின் வருமாறு,
- வைகுண்ட ஏகாதசி திருவிழா 25.12.2019 அன்று திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்குகிறது.
- 27.10.2019 முதல் 05.01.2020 வரை பகல் பத்து திருவிழா
- முக்கிய திருவிழாவான மோகினி அலங்காரம் 05.01.2020
- 06.01.2020 அதிகாலை 4.45 மணிக்கு பரமபத வாசல் திறப்பு
- 12.01.2020 திருக்கைத்தல சேவை
- 13.01.2020 வேடுபரி வைபவம்,
- 15.01.2020 ஸ்ரீநம்பெருமாள் தீர்த்தவாரி
- 16.01.2020 ஸ்ரீநம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெறுகிறது.
இதையும் படிங்க: திருச்சி விமான நிலையத்தில் ஒரே நாளில் 30கிலோ தங்கம் பறிமுதல்!