ETV Bharat / state

Srirangam: வைகுண்ட ஏகாதசி - விமரிசையாக நடந்த தீர்த்தவாரி - தீர்த்தவாரி வைபவம்

Srirangam: வைகுண்ட ஏகாதசி ராப்பத்து விழாவின் 10ஆம் நாளான இன்று தீர்த்தவாரி வைபவமானது வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 11, 2023, 6:23 PM IST

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி - விமரிசையாக நடந்த தீர்த்தவாரி

Srirangam: திருச்சி: 108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனவும் பக்தர்களால் போற்றப்படுவது ‘ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில்’. இந்த கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

அடுத்த பத்து நாட்கள் பகல் பத்து என்றும், அதற்கு அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து விழாவாகவும் கொண்டாடப் படுகிறது. பகல்பத்து திருநாள் கடந்த 1ஆம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதனையடுத்து ராப்பத்து விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது, விழாவின் முதல் நாளன்று பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது.

வைகுண்ட ஏகாதசி ராப்பத்து விழாவின் 10ஆம் நாளான இன்று தீர்த்தவாரி வைபவமானது வெகுவிமரிசையாக நடைபெற்றது. நம்பெருமாள் முத்து பாண்டியன் கொண்டை, நீல் நாயக்க பதக்கம், வைர அபயஹஸ்தம், தங்க பூணூல் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசலை கடந்து சந்திரபுஷ்கரணி வந்தடைந்தார்.

பின்னர் பட்டாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் முழங்கியபடி சின்ன நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளினார். தீர்த்தவாரிக்குப் பிறகு திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளி நம்பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதன் பிறகு இன்று (ஜன.11) இரவு முழுவதும் திருமாமணி மண்டபம் என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். நாளை காலை அதிகாலை நம்மாழ்வாருக்கு மோட்சம் அளித்து, அதன்பிறகு வைகுண்ட ஏகாதசி திருவிழா முடிவடைகிறது.

இதையும் படிங்க: வீடியோ: பழனி முருகன் கோயிலில் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.