ETV Bharat / state

ஶ்ரீரங்கம் இராப்பத்து திருவிழா 2ஆம் நாள்; சவுரி கொண்டை, நெற்றிச்சுட்டியில் ஜொலித்த நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் பகல்பத்து திருவிழா முடிவடைந்து இராப்பத்து திருவிழா துவங்கியுள்ளது. இராப்பத்து திருவிழாவின் 2ஆம் நாளில் நம்பெருமாள் சொர்க்க வாசலைக் கடந்தவுடன் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சொர்க்க வாசலைக் கடந்தனர்.

ஶ்ரீரங்கம் இராப்பத்து திருவிழா; பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சொர்க்க வாசலைக் கடந்தனர்

author img

By

Published : Jan 3, 2023, 7:34 PM IST

ஶ்ரீரங்கம் இராப்பத்து திருவிழா; பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சொர்க்க வாசலைக் கடந்தனர்

திருச்சி: 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி, பகல்பத்து திருநாள் கடந்த ஜனவரி 1ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதனையடுத்து இராப்பத்து விழாவின் முதல் நாளான நேற்று சொர்க்கவாசல் திறப்பு வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2ஆம் நாளான இன்று நம்பெருமாள் சவுரி கொண்டை, நெற்றிச்சுட்டி, மார்பில் பங்குனி உத்திர பதக்கம், தங்க அவுல் சரம், ரத்தின அபயஹஸ்தம், ரத்தின காது காப்பு மற்றும் ரத்தின கிளி, பின்புறம் புஜகீர்த்தி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக திருமாமணி மண்டபம் வந்தடைந்தார்.

நம்பெருமாள் சொர்க்க வாசலை கடந்தவுடன் திரளான பக்தர்கள் 'ரங்கா ரங்கா' என்ற பக்தி பரவசத்துடன் சொர்க்க வாசல் கடந்துசென்றனர். இன்று இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு சொர்க்கவாசல் மற்றும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள உற்சவர் நம்பெருமாளை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைகிறார்.

இதையும் படிங்க: வைகுண்ட ஏகாதசிக்கு சரித்திர நாடகங்களை நடத்தும் கிராம மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.