திருச்சி ராம்ஜிநகர் மில் காலனியைச் சேர்ந்தவர் குமரவேல் (28). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவருகிறார். இவருக்குத் திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் குடும்ப பிரச்னை தொடர்பாக தாய்க்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றும் தகராறு ஏற்பட்டது. அப்போது குமரவேல் தந்தை ஹரிதாஸ் வீட்டில் இல்லை. தகராறு முற்றியதில் தாய் சாந்தியை குமரவேல் கழுத்தை நெரித்ததாகவும், தலையணையை வைத்து அமுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் மூச்சுத்திணறி சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து குமரவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் விரைந்துச் சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய குமரவேலை தேடிவருகின்றனர். குடும்ப பிரச்னையில் மகனே தாயை கொலை செய்த சம்பவம் திருச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தலையில் கல்லைப் போட்டு பெண் கொலை - காவல் துறையினர் விசாரணை!