திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ் துறை தலைவராக பணியாற்றி வந்த பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது கல்லூரி மாணவிகள் ஐந்து பேர் பாலியல் புகார் கொடுத்தனர்.
கல்லூரி முதல்வரிடம் கொடுக்கப்பட்ட இந்தப் புகார் குறித்து விசாரிக்க ஏழு பேர் கொண்ட உள் விசாரணை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் பேராசிரியர் பால் சந்திரமோகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேராசிரியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து மாவட்ட சமூக நல அலுவலகம் தானாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சமூக நல அலுவலர்கள் விசாரணை:
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரடி பார்வையில், மாவட்ட சமூக நல அலுவலரின் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை மாவட்ட சமூக நல அலுவலகம் அமைத்துள்ளது.
அதே கல்லூரியில் மேலும் பல மாணவிகளுக்கு தமிழ் துறை தலைவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக புகார்கள் வர தொடங்கியுள்ளன.
அதனால், இதற்கென பிரத்யேக தொலைபேசி புகார் எண் ஒன்றையும் வெளியிட்டு விரிவான விசாரணை நடத்த சமூக நல அலுவலர் முடிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய பிஷப் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட்