ETV Bharat / state

திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் மோதி கோர விபத்து! - Trichy Madurai National Highway Accident

Vechile Accident: திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Vechile Accident
விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 1:46 PM IST

Trichy - Madurai Highway Accident

திருச்சி: சென்னையில் இருந்து சாயல்குடி நோக்கி தனியார் பேருந்து திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. இந்தப் பேருந்தை விருதுநகரைச் சேர்ந்த மாரிசாமி என்ற ஓட்டுநர் இயக்கி வந்துள்ளார். இந்நிலையில் இன்று (நவ. 3) அதிகாலை 3 மணி அளவில் திருச்சி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது.

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செட்டியாபட்டி- கோரையாற்று பாலம் அருகே தனியார் பேருந்தும், லாரியும் ஒன்றோடு ஒன்று முந்துவதற்கு முயன்ற போது பாலத்தின் தடுப்புச் சுவரில் தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் பின்னால் வந்த இரண்டு தனியார் பேருந்துகளும் விபத்தை கவனிக்காமல் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான பேருந்தின் ஓட்டுநர்கள் விபத்து குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நெடுஞ்சாலையில் வந்த மற்றொரு லாரி மூன்றாவது பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நேரம் மழை நேரம் என்பதால் இந்த விபத்துக்கள் குறித்து அறியாத மேலும் இரண்டு பேருந்துகள் தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக வந்து மோதி விபத்துக்குள்ளானது. திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஐந்து பேருந்துகள் மற்றும் லாரி என ஆறு வாகனங்கள் மழையின் தாக்கம் காரணமாக அடுத்தடுத்து மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தப் பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 30க்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் ஏழு பேருக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த விபத்து சம்பவத்தால் திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சென்றன.

இதையும் படிங்க:"கரோனா பாதித்தவர்களுக்கு எளிதில் மாரடைப்பு" - ஐசிஎம்ஆர் அதிர்ச்சி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.