ETV Bharat / state

ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்! - மூடநம்பிக்கை ஒழிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் மீது பாலியல் புகார்

மூடநம்பிக்கை ஒழிப்பில் ஈடுபட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் மீது, மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

sexual-harrasement-to-students in trichy
மூடநம்பிக்கை ஒழிப்பில் ஈடுபட்ட ஆசிரியர் மீது பாலியல் புகார்!
author img

By

Published : Feb 18, 2021, 7:52 AM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள அரசுப்பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பாலியல் சீண்டலில் ஈடுபடும் ஆசிரியர் மூடநம்பிக்கை ஒழிப்புக்கொள்கையை தீவிரமாக கொண்டவர்.

பள்ளிக்கு வரும் மாணவிகள் வளையல் அணிவது, பூ வைப்பது, பொட்டு வைப்பது, கைகளில் கயிறு கட்டுவது போன்ற செயல்களுக்கு இவர் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், மாணவிகளின் கையைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டுவரும் சூழ்நிலையில், மேலும் ஒரு மாணவி அந்த ஆசிரியர் மீது புகார் கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க: சுதந்திர இந்தியாவில் தூக்கு மேடைக்கு ஏற காத்திருக்கும் முதல் பெண்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.