திருச்சி: மணப்பாறை அடுத்த கள்ளிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் (ஜன.10) இரவு சட்டவிரோதமாகச் சிலர் கிணற்று மண் அள்ளிச் செல்வதாக காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையிலான மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இதனிடையே, காவல்துறையினர் வருவதைக் கண்ட ஓட்டுநர்கள் தப்பி ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து டிராக்டர் மற்றும் ஜேசிபி வாகனங்களைக் கைப்பற்றிக் காவல் நிலையம் எடுத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று (ஜன.11) தப்பி ஓடிய வாகன ஓட்டுநர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கருங்காம்பட்டியைச் சேர்ந்த பாண்டியன் (42), நாவாடிப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் (31) உள்ளிட்ட இருவரைக் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாகியுள்ள வாகன உரிமையாளர்கள் கள்ளிப்பட்டியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி (50) மற்றும் கோட்டைக்காரன்பட்டியைச் சேர்ந்த அடைக்கலராஜ் (31) உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சிறுமிக்கு கணக்கு பாடம் சொல்லித் தரும் போக்குவரத்து காவலர்!