ETV Bharat / state

ஜனவரி 18ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை: எஸ்டிபிஐ அறிவிப்பு!

திருச்சி: குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது.

author img

By

Published : Jan 7, 2020, 6:51 PM IST

trichy sdbi pressmeet  எஸ்டிபிஐ கட்சி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்  நெல்லை முபாரக் பேட்டி  sdpi party has announced that it will block the governor's mansion jan 18  sdpi party protest  sdpi nellai muparak
நெல்லை முபாரக் செய்தியாளர் சந்திப்பு

எஸ்டிபிஐ கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் பாலக்கரையில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுலகத்தில் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நெல்லை முபாரக், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்பப் பெறவேண்டும்.

இச்சட்டத்திருத்தத்திற்கு ஆதரவளித்த அதிமுக அதற்கு பிராய்சித்தமாக சட்டப்பேரவை நடப்பு கூட்டத்தொடரிலேயே அச்சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என்று தீர்மானம் இயற்றவேண்டும். டெல்லியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐந்தாயிரம் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை முபாரக் செய்தியாளர் சந்திப்பு

அதன் ஒரு பகுதியாக மாநிலங்களிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவுள்ளோம். தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டும். ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயலில் காவல்துறை ஈடுபடக்கூடாது.

நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் எஸ்டிபிஐ கட்சி கலந்துகொள்ளும். டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த காரணத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க: ' நாங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரானவர்கள் அல்ல ' - துரைமுருகன் அதிரடி

Intro:ஜனவரி 18ஆம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.Body:

திருச்சி:
ஜனவரி 18ஆம் தேதி கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் கூறினார்.
எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருச்சி பாலக்கரையில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் இன்று நடந்தது. முன்னதாக நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெறவேண்டும். சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்த அதிமுக அதற்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் தமிழகத்தில் இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து, சட்டத்திற்கு எதிராக சட்டமன்ற நடப்பு கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் எடுத்த முடிவின்படி நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 5 ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக மாநிலங்களில் உள்ள கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் வரும் ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெறுகிறது. ஜனநாயகத்தின் மீது அக்கறையுள்ள அமைப்புகள், அரசியல் கட்சிகள் இதில் பங்கேற்று ஆதரவு அளிக்க வேண்டும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கையை கைவிட்டு, வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும். ஜனநாயகத்தின் குரலை நசுக்கும் செயலில் காவல் துறையினர் ஈடுபடக்கூடாது. உள்ளாட்சித் தேர்தலில் 1033 ஊராட்சி உறுப்பினர்கள், 3 பஞ்சாயத்து தலைவர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை எஸ்டிபிஐ கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இதற்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. ஆளுங்கட்சியின் ஒரு பிரிவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. இத்தகைய செயல்பாட்டை தேர்தல் ஆணையம் மாற்றிக்கொண்டு விரைவில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்த அறிவிப்பு வெளியிட வேண்டும். நாளை நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் எஸ்டிபிஐ கட்சி கலந்து கொள்ளும். டெல்லி நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது கண்டிக்கத்தக்க செயலாகும். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்த காரணத்தால்தான் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.