ETV Bharat / state

இருசக்கர வாகன விபத்து - தேர்வு எழுத சென்ற மாணவி பலி - school student death in accident in trichy

திருச்சியில் நிகழ்ந்த இரு சக்கர வாகன விபத்தில் தேர்வு எழுதச்சென்ற பள்ளி மாணவி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.

இருசக்கர வாகன விபத்து - தேர்வு எழுத சென்ற மாணவி பலி

author img

By

Published : May 13, 2022, 7:43 AM IST

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காசிக்கடை பகுதியை சேர்ந்த முருகேசன் மகள் ஸ்ரீவேதநாயகி. இவர் நெ.1டோல்கேட் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஷ் வித்யாலயா பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் நேற்று பொதுத்தேர்வு எழுதுவதற்காக அவரது சகோதரர் கரணுடன் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். உத்தமர்கோவில் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த ஸ்ரீவேதநாயகியை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : ஆன்லைன் கேமால் வந்த வினை - நீட் தேர்வுக்கு தயாரான மாணவர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.