ETV Bharat / state

‘வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்படும் பணம் பாஜகவுக்கு நன்கொடை’

திருச்சி: வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்படும் பணம் பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது என சஞ்சய் தத் தெரிவித்தார்.

‘வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்படும் பணம் பாஜகவுக்கு நன்கொடை’
‘வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்படும் பணம் பாஜகவுக்கு நன்கொடை’
author img

By

Published : Jan 21, 2020, 5:53 PM IST

திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்துகொண்டார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ஊரகப் பகுதிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம், ஆள்பலம், பணபலம் ஆகியவை இந்தத் தேர்தலில் எடுபடவில்லை. அடுத்துவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணி வரலாற்று வெற்றிபெறும். இந்த முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.

மோடி ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான பெரிய திட்டங்களும் கிடைக்கவில்லை. அனைத்து திட்டங்களும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 4.8 சதவீதம்தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் 4.2 சதவீதமாக குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். மோடி தலைமையிலான அரசில் நாட்டின் பொருளாதாரம் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் கட்டமைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஆனால் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் இத்தகைய சீரழிவு ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடுகளால் இந்தியா மூளை முடுக்கெல்லாம் போராட்டக் களமாக மாறியுள்ளது. இவற்றை சரி செய்ய பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது கல்விச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாத பிரதமர் மோடி, மாணவர்களின் தேர்வு குறித்து பேச என்ன தகுதி உள்ளது. நாட்டிலுள்ள 30 சதவீத பணக்காரர்கள் 4 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். ஏழைகள், நடுத்தர மக்கள் நசுக்கப்பட்டுகின்றனர். இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மோடியின் பணக்கார நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பாஜகவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசு சுயலாபத்திற்காக பாஜக ஆட்டும் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஆதிக்கத்தை மீறி செயல்பட அதிமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கூட்டணி தொடர்பான பிரச்னை குறித்து ஏற்கனவே மாநில தலைவர் அழகிரியும், திமுக தலைவர் ஸ்டாலினும் விளக்கம் அளித்துவிட்டனர். அதனால் அது தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது என்றார்.

‘வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்படும் பணம் பாஜகவுக்கு நன்கொடை’

இந்தக் கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜன், பொருளாளர் ராஜா நசீர் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Intro:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் கூறினார்.Body:திருச்சி:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வரலாற்று வெற்றி பெறும் என்று சஞ்சய் தத் கூறினார்.
திருச்சி மாநகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் அலுவலகமான அருணாச்சல மன்றத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டார். முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஊரகப் பகுதிகளுக்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக, காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். அதிமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம், ஆள்பலம், பணபலம் ஆகியவை இந்த தேர்தலில் எடுபடவில்லை. அடுத்துவரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் காங்கிரஸ், திமுக தலைமையிலான கூட்டணி வரலாற்று வெற்றி பெறும். இந்த முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் மனநிலை வெளிப்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர்.
மோடி ஆட்சியில் தமிழகத்திற்கு எந்தவிதமான பெரிய திட்டங்களும் கிடைக்கவில்லை. அனைத்து திட்டங்களும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்பை விட 4.8 சதவீதம் தான் வளர்ச்சி அடைந்துள்ளது. இது மேலும் 4.2 சதவீதமாக குறையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்துள்ளனர். மோடி தலைமையிலான அரசில் நாட்டின் பொருளாதாரம் ஐசி யூ, அதாவது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் கட்டமைத்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்து விட்டுச் சென்றார்.
ஆனால் மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளால் இத்தகைய சீரழிவு ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான செயல்பாடுகளால் இந்தியா மூளை முடுக்கெல்லாம் போராட்டக் களமாக மாறியுள்ளது. இவற்றை சரி செய்ய பிரதமர், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனது கல்விச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாத பிரதமர் மோடி மாணவர்களின் தேர்வு குறித்து பேச என்ன தகுதி உள்ளது. நாட்டிலுள்ள 30 சதவீத பணக்காரர்கள் 4 மடங்கு வளர்ச்சியை அடைந்துள்ளனர். ஏழைகள், நடுத்தர மக்கள் நசுக்கப்பட்டு உள்ளனர். இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணம் மோடியின் பணக்கார நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றப்பட்ட பணத்தின் ஒரு பகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசு சுயலாபத்திற்காக பாஜக ஆட்டும் ஆட்டத்திற்கு ஏற்ப ஆடிக் கொண்டிருக்கிறது. பாஜகவின் ஆதிக்கத்தை மீறி செயல்பட அதிமுக அரசு தவறிவிட்டது. தமிழகத்தில் திமுக காங்கிரஸ் இடையே ஏற்பட்ட கூட்டணி தொடர்பான பிரச்சினை குறித்து ஏற்கனவே மாநில தலைவர் அழகிரியும், திமுக தலைவர் ஸ்டாலினும் விளக்கம் அளித்து விட்டனர். அதனால் அது தொடர்பாக கருத்து தெரிவிக்க இயலாது என்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கலை, கோவிந்தராஜன், பொருளாளர் ராஜா நசீர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.