திருச்சியில் சமாஜ்வாடி பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவரும், பொதுச்செயலாளருமான அல்லிக்கொடி தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்திற்குப் பின்னர் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அல்லிக்கொடி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக, அதிமுக தவிர எங்களுடன் நேசமாக இருக்கும் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளோம்.
இந்த இரு கட்சிகளின் கூட்டணியில் உள்ள கட்சிகளுடனும் உறவு கிடையாது. ஏற்கனவே கூட்டணி தொடர்பாக முதற்கட்ட பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து முடிந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதி பங்கீடு குறித்து இறுதி செய்யவும் எங்களது கட்சியின் தேசியத் தலைவர்கள் தமிழ்நாடு வரவுள்ளனர். அவர்கள் வந்த பின்னர் எங்களது கூட்டணி குறித்து, தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்றார்.
இதன் பின்னர் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது, அமமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் எங்கள் தேசிய தலைவர்கள் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் அமமுக போட்டியிடுவதில் சிக்கல்!