மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தடைந்தது. இதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் சோதனை செய்தனர்.
அப்போது திருநெல்வேலியைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்ற பயணி தனது உடலிலும், பேன்ட் பாக்கெட்டிலும் தங்கத்தை மறைத்துவைத்து கண்டுபிடிக்கப்பட்டது.
![Trichy](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn_tri_01_14_gold_seized_photo2_72025331557799795241-46_1405email_1557799806_560.jpg)
இதையடுத்து அவரிடம் இருந்து 197 கிராம் தங்கத்தை வான் நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 6.31 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அப்துல் மஜித்திடம் அலுவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.