திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும், சமுதாய சுகாதார செவிலியருக்கு தாய் சேய் நல அலுவலர்களாகப் பதவி உயர்வு வழங்க வேண்டும், கிராம சுகாதார செவிலியருக்கு பாலின பாகுபாடின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமப்புற செவிலியர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
இதில் திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கிராமப்புற செவிலியர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மன உளைச்சலில் செவிலியர்கள்; கோரிக்கைகளை நிறைவேற்ற வீதிக்கு வந்து போராட்டம்!