திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள் மாதம்தோறும் எண்ணப்படும்.
அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணியானது, கருடாழ்வார் மண்பத்தில், கோயில் இணை ஆணையர் மாரிமுத்து முன்னிலையில் இன்று (பிப்ரவரி 23) நடைபெற்றது.
அப்போது கோயில் உண்டியலில் 87 லட்சத்து 3 ஆயிரத்து 958 ரூபாய் ரொக்கம், 153 கிராம் தங்கம், 1,870 கிராம் வெள்ளி, 58 வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை காணிக்கையாக பெறப்பட்டன என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'பிக் பி'-யை இயக்கிய நாகராஜ் மஞ்சுளே - வெளியானது ஜூண்ட் ட்ரெய்லர்