ETV Bharat / state

மருத்துவரிடம் பிழைத்து வண்டலூர் பூங்காவில் இறந்த குரங்கு குட்டி... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டை கேட்கும் கோர்ட்! - VANDALUR ZOO BABY MONKEY

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு பின் உயிரிழந்த குட்டி குரங்கின் மருத்துவ கிசிச்சை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கால்நடை மருத்துவருடன் குரங்கு குட்டி, சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்)
கால்நடை மருத்துவருடன் குரங்கு குட்டி, சென்னை ஐகோர்ட் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2024, 10:54 AM IST

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில், கால்நடை மருத்துவர் வல்லையப்பன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ராணிப்பேட்டையில் நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமில், நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த ஒரு குரங்கு குட்டியை வனத்துறை பாதுகாப்பாளர் ஒருவர் கொண்டு வந்ததாகவும், சுமார் 10 மாத சிகிச்சைக்கு பிறகு குணமடைந்த குரங்கு குட்டியை வனத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் 26ம் தேதி வாங்கி சென்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் விட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அந்த குரங்கு குட்டிக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்க வாய்ப்புள்ளதால், குரங்கு குட்டி பூரணமாக குணமடையும் வரை தனது கட்டுப்பாட்டில் ஒப்படைக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார். ஆனால், குட்டி குரங்கை ஒப்படைக்க மறுத்த நீதிமன்றம், வேண்டுமானால் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று குரங்கு குட்டியை பரிசோதிக்கலாம் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், அந்த குட்டி குரங்கு திடீரென உயிரிழந்தது.

இந்த நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த குட்டி குரங்கு கடந்த நவம்பர் மாதம் 21ம் தேதி உயிரிழந்தது தொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும் என கால்நடை மருத்துவர் வல்லையப்பன் சார்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு, நீதிபதி சி.வி கார்த்திகேயன் முன்பு முறையீடு செய்தார்.

இதையும் படிங்க: ஒன்பது சவரன் நகைக்காக சகோதரி கொலை: திருப்பத்தூர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

அந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், குட்டி குரங்குக்கு சிறப்பு மருத்துவர்கள் மூலம் போதுமான சிகிச்சை வழங்கப்பட்டதாகவும், ஆனால், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் குரங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் வழக்கறிஞர், கால்நடை மருத்துவரால் பராமரிக்கப்பட்ட குரங்கு நல்ல ஆரோக்கியத்துடன் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 2023 முதல் 2024 அக்டோபர் மாதம் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த குரங்கு அக்டோபர் 26ம் தேதி வனத்துறையிடம் ஒப்படைக்கும் வரை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. அதனால், சந்தேகமான முறையில் உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர், மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் உடல்நிலை சரியாகி 100 கிராம் எடை அதிகிரித்திருந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி கார்த்திகேயன், குட்டி குரங்குக்கு என்ன மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது எனவும், உயிரிழந்த குரங்கின் பிரேத பரிசோதனை அறிக்கையையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 28ம் தேதி ஒத்தி வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.