கர்நாடகா: நவம்பர் 13ஆம் தேதி கர்நாடகவின் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில் ஷிக்கான், சன்னபட்னா ஆகிய இரண்டு தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மேலும், சந்தூர் தொகுதில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், சந்தூர் தொகுதியில் துக்காராம் (காங்கிரஸ்) எம்.எல்.ஏவாகவும், ஷிக்கான் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை (பாஜக) எம்.எல்.ஏவாகவும், சன்னபட்னா தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் குமாரசாமி (ஜனதா தளம்) எம்.எல்.ஏவாகவும் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி-கள் ஆன நிலையில் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தனர். இதையடுத்து இந்த இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த தேர்தலில் சன்னபட்னா தொகுதியில் ஐந்து முறை எம்.எல்.ஏவாக இருந்த பாஜக வேட்பாளர், நடிகரும், அரசியவாதியுமான சி.பி யோகேஸ்வராவை பின்னுக்கு தள்ளி முன்னாள் பிரதமரான எச்.டி. தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் குமாரசாமியின் மகனுமான ஜனதா தளம் வேட்பாளர், நடிகரும், அரசியல்வாதியுமான நிகில் குமாரசாமி முன்னிலை உள்ளார். ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜார்கண்டில் பா.ஜ.க+ | மகாராஷ்டிராவில் பா.ஜ.க+ | வயநாட்டில் பிரியங்கா காந்தி முன்னிலை
ஷிக்கான் தொகுதியில் 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் முதல்வருக்கு எதிராக தோல்வியைச் சந்தித்த காங்கிரஸின் யாசிர் அகமது கான் பதானை எதிர்த்து போட்டியிட்ட பசவராஜ் பொம்மையின் மகன், பாஜகவின் பரத் பொம்மை முன்னிலை வகிக்கிறார்.
மேலும், சந்தூர் தொகுதியில், எம்.எல்.ஏ பதிவை ராஜினாமா செய்த காங்கரஸ் எம்.எ.ஏவும், எம்.பி. பெல்லாரி துக்காராமின் மனைவி அன்னபூர்ணா பாஜக எஸ்.டி மோர்ச்சா தலைவர் பங்காரு ஹனுமந்துவை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்