ETV Bharat / state

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.90 லட்சம் காணிக்கை!

திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 90 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டிருந்தது என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayapuram temple hundiyal counting  சமயபுரம் மாரியம்மன் கோயில்  Rs 90 lakh donation in Samayapuram Mariamman temple  Samayapuram Mariamman temple  சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் ரூ.90 லட்சம் காணிக்கை
Samayapuram Mariamman temple
author img

By

Published : Jan 26, 2021, 5:42 PM IST

தமிழ்நாட்டில், பிரசித்திப் பெற்ற ஸ்தலமாக திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் திகழ்கிறது. இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமில்லாமல், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அவர்கள் தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் ஜனவரி மூன்றாவது, நான்காவது வாரத்தில் செலுத்திய காணிக்கைகளை எண்ணுவதற்காக இன்று உண்டியல் திறக்கப்பட்டது. கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் தலைமையில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.

இதில், ரூ.90 லட்சத்து 07 ஆயிரத்து 494 ரொக்கமும், 2 கிலோ 182 கிராம் தங்கமும், 4 கிலோ 174 கிராம் வெள்ளியும், 140 வெளிநாட்டு நோட்டுகளும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்ததாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மேல்மலையனுார் அங்காளபரமேஸ்வரி ஆலய உண்டியலில் ரூ.29 லட்சத்துக்கும் மேல் காணிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.