திருச்சி: ஓமன், மஸ்கட், துபாய், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டுகின்றன. இந்த விமானத்தில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.
அந்த வகையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு அலுவர்கள் சோதனை செய்தனர். அப்போது காரைக்குடியைச் சேர்ந்த அயூப்கான் (30), தஞ்சை மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்த காஜா மொய்தீன் (65) என்ற பயணிகள் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.
அப்போது அயூப்கான் எடுத்து வந்த டார்ச் லைட்டில் ரூ.60.76 லட்சம் மதிப்பிலான 1.25 கிலோ தங்கம் இருந்தது. மேலும் காஜா மொய்தீன் உடலில் பேஸ்ட் வடிவில் ரூ.18 .97 லட்சம் மதிப்புடைய 287 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் சுங்கத்துறை அலுவலர்கள் அதனை பறிமுதல் செய்ததோடு, அவர்கள் இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 79.73 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தோழியின் பர்த்டே பார்ட்டியில் 7 பேரை சுட்டுக்கொன்ற பாய் பிரண்ட்