ETV Bharat / state

உடற்கல்வி ஆசிரியரிடம் ரூ.2.50 லட்சம் பணம் பறிப்பு - money laundering to physical education teacher viral CCTV foodtageMONEY LAUNDERING TO

ஸ்ரீரங்கம் காவல்நிலையம் அருகே உடற்கல்வி ஆசிரியர்யிடம் மர்ம நபர் 2 லட்சத்து 50 ஆயிரம் பணம் பறித்து சென்றது தொடர்பாக காவல்துரையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.

உடற்கல்வி ஆசிரியர்யிடம் மர்ம நபர் பணம் பறிப்பு -வழக்குப்பதிவு

author img

By

Published : May 3, 2022, 11:23 AM IST

திருச்சி: ஸ்ரீரங்கம் கீழவாசலை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவர் ஶ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் நாச்சிமுத்து மாதம் மாதம் ஓய்வூதிய பணத்தை எடுப்பதற்காக ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள கனரா வங்கிக்கு வருவது வழக்கம், இந்தநிலையில் கடந்த மாத ஓய்வூதிய தொகையை எடுப்பதற்காக நேற்று மதியம் கனரா வங்கிக்கு தனது இருசக்கர வாகனத்தில் நாச்சிமுத்து வந்தார்.

பின்னர் வங்கியிலிருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வங்கியின் அருகிலுள்ள தனலட்சுமி சிட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பரை சந்திப்பதற்கு சென்று கொண்டிருந்தார், அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கரத்தில் வந்த மர்ம நபர் அவர் கையில் வைத்திருந்த பணப்பையை பிடுங்கிக் கொண்டு மின்னல் வேகத்தில் பறந்தார்.

உடனே பணத்தை பறிகொடுத்த நாச்சிமுத்து கூச்சலிட்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பணத்தை பிடுங்கி சென்ற அந்த நபரை பிடிக்க முடியவில்லை உடனே அருகில் உள்ள ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் கடந்த மாதம் இதே கனரா வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு வெளியே நடந்து வந்த பெண்ணிடம் மர்ம நபர்கள் பணத்தை பறித்து சென்ற சம்பவம் நடைபெற்ற நிலையில் மீண்டும் அதே வங்கியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் ஸ்ரீரங்கம் காவல் நிலையம் அருகே வழிப்பறி நடந்துள்ளதால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:CCTV காட்சி: மூதாட்டியிடம் பணம் பறிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.