திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாகாளிக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். . பிரபல ரவுடியான இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இவர் பெரம்பலூர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சமயபுரம் அருகே பள்ளி விடை கிராமத்தைச் சேர்ந்த விஜய் என்பவரின் மனைவிக்கும் ஆனந்தனுக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இதை அறிந்த விஜய் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இந்நிலையில் சமயபுரம் கடைவீதியில் உள்ள ஒரு விறகுக் கடையில் ஆனந்த் நேற்றிரவு (ஜூன் 24) தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த விஜய். ஆனந்த் தலையில் கல்லை போட்டு தாக்கியுள்ளார். இதில் ஆனந்த் நிகழ்விடத்திலேயே பலியானர்.
இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு வந்து ஆனந்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இது பற்றி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விஜய்யை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.