ETV Bharat / state

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் - அமைச்சர் அன்பில் மகேஷ்

திருச்சி: 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் வழங்கப்படும் என பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை!

author img

By

Published : Jun 17, 2021, 5:12 PM IST

Updated : Jun 17, 2021, 5:52 PM IST

அரசு மருத்துவமனை,ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவ உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் வழங்கும நிகழ்ச்சி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொருட்களை சுகாதார துறை அலுவலர்களிடம் வழங்கினார்.

பின்னர்,அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்’’ 10, 12ஆம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனித் தேர்வர்களை கவனத்தில் கொண்டுள்ளோம். மதிப்பெண் வழங்குவதா அல்லது தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.

இதையடுத்து, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படுகிறது. அந்த ஆலோசனைகள் அடிப்படையிலும், சி.பி.எஸ்.சியில் எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.

10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டேப்லெட் - அமைச்சர் அன்பில் மகேஷ்
தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வருகின்றன. எந்தபள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம். அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.கடந்த ஆட்சியில் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இரண்டு லட்சம் மடிக்கணினி இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அந்த மாணவர்களுக்கும் சேர்த்து தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி டேப்லெட் வழங்கப்படும்.கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது. இனி அவ்வாறு மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது. அந்த, மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் நிலுவைத்தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது ’’ என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவைத் உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மணப்பாறை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அப்துல் சமது, மருத்துவ துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கிஷோர் கே சாமி மீது புகார் அளித்த நடிகை!

Last Updated : Jun 17, 2021, 5:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.